அன்னவாசல் அருகே, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
அன்னவாசல் அருகே குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அன்னவாசல்,
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. பல்வேறு கட்சியினர் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் நாடு முழுவதும் கண்டனம் தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
இந்த மசோதாவை கண்டித்து அசாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் மாணவர்கள், பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந் நிலையில் அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டியில் ஜமாத் தலைவர் சாகுல் அமீது தலைமையில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குடியுரிமை சட்ட மசோதாவை திரும்பபெறு, மத்திய அரசே மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்தாதே என கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் துணை ஜமாத்தலைவர் ஹூசேன் முகமது, பொருளாளர் முகமது இப்ராஹீம் உள்பட பள்ளிவாசல் நிர்வாகிகள் ஜமாத்தார்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிகாமணி தலைமையில் அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.