கோவிலில் குத்துவிளக்கு திருடிய வாலிபர் கைது
சேலத்தில், கோவிலில் குத்துவிளக்கு திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சேலம்,
சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் நேற்று காலை 2 வாலிபர்கள் சந்தேகப்படும் படி சுற்றித்திரிந்து கொண்டிருந்தனர். இதைப்பார்த்த பொது மக்கள் சிலர் அவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.
ஒருவரிடம் குத்துவிளக்கு இருந்தது தெரிய வந்தது. அது குறித்து கேட்ட போதும் அவர்கள் பதில் அளிக்கவில்லை. இதையொட்டி 2 பேரையும் பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து விசாரித்தனர். அப்போது அந்த குத்துவிளக்கு பிரட்ஸ் ரோட்டில் உள்ள முனியப்பன் கோவிலில் இருந்து திருடியதை ஒப்புக்கொண்டனர்.
வாலிபர் கைது
மேலும் இருவரும் சேர்ந்து அந்த பகுதியில் உள்ள வீடுகளில் திருடும் முயற்சியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையொட்டி அவர்களை சேலம் டவுன் போலீசில் ஒப்படைப்பதற்காக அழைத்து சென்றனர். அப்போது ஒருவர் தப்பி ஓடி விட்டார். பிடிபட்ட வாலிபரை போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணை நடத்திய போது அவர் சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த சதாம்உசேன் (வயது 29) என்றும், கோவிலில் குத்துவிளக்கு திருடியதையும் ஒப்புக்கொண்டார். இதையொட்டி அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.