கோட்டூர் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி போலீசார் விசாரணை
கோட்டூர் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோட்டூர்,
திருவாரூர் மாவட்டம், கோட்டூரை அடுத்த வாட்டார் பகுதியில் உள்ள கடைவீதியில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையத்தை அப்பகுதியில் உள்ள மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில், மர்மநபர்கள் சிலர் இந்த மையத்தின் உள்ளே புகுந்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்று உள்ளனர்.
அப்போது அவர்கள் ஏ.டி.எம். எந்திரத்தின் மேல் பாகத்தை மட்டும் உடைத்தனர். மீதியை உடைக்க முடியாததால் அதில் இருந்த பணம் தப்பியது.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
ஏ.டி.எம். மையத்தின் எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் திருக்களார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, ஏ.டி.எம். மையத்தின் எந்திரத்தில் கொள்ளையடிக்க முயன்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.