விழுப்புரம் அருகே, துணிக்கடை ஊழியர் மனைவியிடம் தங்கச்சங்கிலி பறிப்பு - வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு

விழுப்புரம் அருகே துணிக்கடை ஊழியரின் மனைவியிடம் தங்கச்சங்கிலியை பறித்துச்சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-12-19 21:30 GMT
வளவனூர்,

விழுப்புரத்தை அடுத்த வளவனூர் அருகே உள்ள சிறுவந்தாடு கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவர் புதுச்சேரியில் உள்ள ஒரு துணிக்கடையில் ஊழியராக வேலை செய்கிறார்.

இவரும் இவருடைய மனைவி லதா என்ற ருக்மணியும் (வயது 45) நேற்று முன்தினம் விழுப்புரத்தில் உள்ள மளிகை கடைக்கு வந்து மளிகை பொருட்களை வாங்கிக்கொண்டு மீண்டும் விழுப்புரத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் சிறுவந்தாட்டுக்கு புறப்பட்டனர்.

பஞ்சமாதேவி-சிறுவந்தாடு சாலையில் உப்புமுத்தாம்பாளையம் பகுதியில் ஒரு வளைவில் செல்லும்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், திடீரென லதா கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டார். பறிபோன நகையின் மதிப்பு ரூ.1 லட்சமாகும்.

இதுகுறித்த புகாரின்பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச்சென்ற வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்