குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை கண்டித்து தர்மபுரியில் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமத் அமைப்பு சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தர்மபுரி,
குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமத் அமைப்பு சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் மாவட்ட தலைவர் ஜஹாங்கீர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இப்ராஹிம், மாவட்ட பொருளாளர் அன்சர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்பின் மாநில செயலாளர் முகமது பைசல் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில், மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தக்கூடாது என்று அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ளது. தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்து நிறைவேற்றி இருப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இந்த மசோதாவால் அகதிகளாக வரும் முஸ்லிம்கள், இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுவது நியாயமற்றது. முஸ்லிம்களின் உரிமைகளை பறிக்கும் மத்திய அரசின் போக்கு இந்தியாவை மத ரீதியாக பிளவுபடுத்தும் செயல். இந்த மசோதாவை திரும்ப பெற மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்ற முஸ்லிம் பெண்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினார்கள்.