கல்லூரி மாணவிகளை கிண்டல் செய்ததை தட்டி கேட்ட தாய்-மகன் மீது தாக்குதல் வாலிபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
மணவாளக்குறிச்சி அருகே கல்லூரி மாணவிகளை கிண்டல் செய்ததை தட்டி கேட்ட தாய் மற்றும் மகனை தாக்கிய வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மணவாளக்குறிச்சி,
மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டிவிளை பிலாவிளை பகுதியை ேசர்ந்தவர் ஜினுகுமார் (வயது 48). இவருடைய தாயார் லீலா. இவர் வீட்டின் முன்பு பெட்டிக்கடை நடத்தி வருகிறார். லீலா கடையின் முன்பாக கல்லூரி மாணவிகள் செல்வது வழக்கம்.
சில வாலிபர்கள் கடையின் அருகில் நின்று கொண்டு அந்த வழியாக கல்லூரிக்கு செல்லும் மாணவிகளை கேலி செய்வதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், சம்பவத்தன்றும் மாணவிகளை வாலிபர்கள் கிண்டல் செய்த போது லீலா தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர்கள் லீலாவை தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றனர்.
தாக்குதல்
இதுதொடர்பாக ஜினுகுமார் மணவாளக்குறிச்சி போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதனை அறிந்த அந்த வாலிபர்கள் 3 பேர் ஜினுகுமாரின் வீட்டிற்குள் புகுந்து லீலாவை கத்தியால் தாக்கியுள்ளனர். தடுக்க வந்த ஜினுகுமாரையும் கையால் தாக்கி கொலைமிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்றனர். படுகாயமடைந்த தாய் மற்றும் மகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து ஜினுகுமார் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். அதன்போில் அம்மாண்டிவிளையை சேர்ந்த ஆனந்த் (23), அனித் (19) உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.