வல்லம்படுகையில், டயர் வெடித்ததால் லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது

வல்லம்படுகையில் டயர் வெடித்ததால் லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது.

Update: 2019-12-18 22:00 GMT
அண்ணாமலைநகர், 

பெரம்பலூரில் இருந்து பாறாங்கற்கள் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று தரங்கம்பாடி துறைமுகத்துக்கு சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் (வயது 38) என்பவர் ஓட்டினார். கடலூர் மாவட்டம் வல்லம்படுகை கொள்ளிடம் பாலம் அருகே வந்தபோது லாரியின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது.

இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தறிகெட்டு ஓடி சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புக்கட்டையை உடைத்து கொண்டு பாலத்தையொட்டி உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் அதிர்‌‌ஷ்டவசமாக டிரைவர் ரவிச்சந்திரன் சிறியகாயங்களுடன் உயிர்தப்பினார்.

இது குறித்த தகவலின் பேரில் அண்ணாமலைநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொக்லைன் எந்திரம் மூலம் லாரியை அங்கிருந்து அகற்றினர். பின்னர் போக்குவரத்தை சரிசெய்தனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் கொள்ளிடம் பாலம் அருகே சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்