முத்துவீரக்கண்டியன்பட்டியில் 30 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின விவசாயிகள் கவலை
முத்துவீரக்கண்டியன்பட்டி கிராமத்தில் 30 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
திருக்காட்டுப்பள்ளி,
தஞ்சை மாவட்டம் முத்துவீரக்கண்டியன்பட்டி கிராமத்தில் சாயல்குடி ஏரியில் இருந்து பாசனம் பெற்று விவசாயிகள் ஒரு போக நெல் சாகுபடி செய்திருந்தனர். தொடர்ந்து பெய்த மழையால் ஏரிகளில் தண்ணீர் பெருகி உள்ளது. மேலும் முத்துவீரக்கண்டியன்பட்டி விவசாயிகள் விவசாயம் செய்துள்ள நிலங்களுக்கு அருகில் மாதுரான் ஏரி உள்ளது. மாதுரான் ஏரியும் நிரம்பி வழிந்து வருகிறது.
இந்த தண்ணீர் முத்துவீரக்கண்டியன்பட்டி கிராமத்தில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள வயல்களுக்குள் புகுந்து உள்ளது. இதனால் சுமார் 30 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளது. எனவே விவசாயிகள் கவலையில் ஆழந்துள்ளனர்.
இது குறித்து முத்துவீரக்கண்டியன்பட்டி முன்னாள் ஊராட்சி தலைவர் அருள் கூறியதாவது:-
வடிய வைக்க வேண்டும்
கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையால் சாயல்குடி ஏரி நிரம்பி வழிகிறது. இதைப்போல முத்துவீரக்கண்டியன்பட்டியை அடுத்துள்ள வீரமரசன்பேட்டை கிராமத்தின் அருகில் உள்ள மாதுரான் எரியும் நிரம்பி வழிகிறது. மாதுரான் ஏரிக்கு தெற்கு பகுதியில் கரை இல்லாததால் ஏரி தண்ணீர் நிரம்பி முத்துவீரக்கண்டியன்பட்டி கிராமத்தின் வயல்களில் புகுந்து தண்ணீர் வடிய இயலாத நிலை உள்ளது. தற்போது 30 ஏக்கருக்கு மேல் முத்துவீரக்கண்டியன்பட்டி கிராமத்தில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன.
இது குறித்து பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த பகுதியை நேரில் பார்வையிட்டு வயல்களில் தேங்கி உள்ள தண்ணீரை வடிய வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.