குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்கு பெட்டிகளை சீர் செய்யும் பணி தீவிரம்

குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்குப்பெட்டிகளை சீர் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2019-12-18 22:45 GMT
குளித்தலை,

தமிழகத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் வருகிற 27 மற்றும் 30-ந்தேதிகளில் 2 கட்டமாக நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றிய பகுதிகளுக்கு 30-ந்தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் இந்த ஊராட்சி பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ந்தேதி தொடங்கியது. குளித்தலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒரு மாவட்ட ஊராட்சி உறுப்பினர், 10 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 13 ஊராட்சி மன்ற தலைவர்கள், 120 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு 446 பேர் வேட்மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் வேட்புமனு பரிசீலனை முடிந்த நிலையில் 439 பேர் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

வாக்கு பெட்டிகளை சீர் செய்யும் பணி

குளித்தலை ஊராட்சி ஒன்றிய பகுதியில் உள்ள வாக்காளர்கள் ஒவ்வொருவரும் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் என்கிற 4 பதவிகளுக்கு 4 ஓட்டுகள் போடவேண்டியுள்ளன. அந்த ஓட்டுகளும் வாக்குச்சீட்டு முறையில் அவர்கள் செலுத்த வேண்டியுள்ளது. இந்தநிலையில் வாக்குப்பதிவுக்கு தேவையான பல்வேறு பணிகள் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிலும் வாக்குச்சீட்டுகளை போடுவதற்கான வாக்கு பெட்டிகளை சீர் செய்து, தயார் நிலையில் வைக்கும் பணிகள் குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்