மணவாச்சி குளத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
மணவாச்சி குளத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூர் ஊராட்சிக்கு உட்பட்ட மணவாத்திப்பட்டி கிராமத்தில் மணவாச்சி குளம் உள்ளது. இந்த குளம் 27 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த குளத்தின் பாசன பகுதிகளான குட்டகுளவாய்ப்பட்டி, லட்சுமாபுரம், மணவாத்திப்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த 100 ஏக்கருக்கு மேலான நிலங்கள் பாசன பகுதிகளாக உள்ளன. தற்போது மணவாச்சி குளம் முழுவதும் நிலத்தடி நீரினை அதிகம் உறிஞ்சக்கூடிய சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து உள்ளதால், குளம் சிறிய காடுபோல் காட்சி அளிக்கின்றது. இதனால் மணவாச்சி குளத்தில் எவ்வளவு நீர் தேங்கினாலும், விரைவில் வற்றி விடுகின்றது. இதனால் இந்த குளத்தினால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. மேலும் குளத்திற்கு வரும் வரத்துவாரிகளிலும் அதிக அளவில் கருவேல மரங்கள் உள்ளன. மேலும் சில இடங்களில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். இதனால் மழை பெய்யும் போது சரியாக குளத்திற்கு தண்ணீர் வருவதில்லை.
கோரிக்கை
எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மணவாச்சி குளத்தை ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும். மேலும் வரத்துவாரிகளில் உள்ள சீமைக் கருவேல மரங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.