பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை தொடர்ந்தால்: கடைகளின் வணிக உரிமம் ரத்து செய்யப்படும் - அமைச்சர் கந்தசாமி எச்சரிக்கை
பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை தொடர்ந்தால் கடைகளில் வணிக உரிமம் ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் கந்தசாமி எச்சரிக்கை விடுத்தார்.
புதுச்சேரி,
புதுவையில் 50 மைக்ரான் அளவுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதையும் மீறி இவை புழக்கத்தில் இருந்து வருகின்றன.
இந்தநிலையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து புதுவை நகராட்சி ஆணையர் சிவக்குமார் கடந்த வாரம் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினார்.
இந்தநிலையில் நேற்று ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள கடைகளில் சுற்றுச்சூழல்துறை அமைச்சரான கந்தசாமி ஆய்வு மேற்கொண்டார். அவருடன் கலெக்டர் அருண், புதுவை நகராட்சி ஆணையர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் சென்று இருந்தனர்.
இந்த ஆய்வின்போது பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு 2 கடைகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுதொடர்பாக அமைச்சர் கந்தசாமி கூறியதாவது:-
புதுச்சேரி மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் தடையை அமல்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறோம். இதுதொடர்பாக பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி கூடங்களில் சோதனை நடத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது 2 கடைகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதையும் மீறி பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் வணிக உரிமம் ரத்துசெய்யப்படும். இவ்வாறு அமைச்சர் கந்தசாமி கூறினார்.