இந்த மாத இறுதிக்குள் மந்திரிசபை விரிவாக்கம் - எடியூரப்பா பேட்டி
இந்த மாத இறுதிக்குள் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் என்றும், இடைத்தேர்தலில் வெற்றிபெற்றவர்களுக்கு மட்டுமே மந்திரி பதவி வழங்கப்படும் என்றும் முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் பா.ஜனதா 12 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அக்கட்சி பெரும்பான்மை பலத்தை பெற்றுள்ளது. மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய முதல்-மந்திரி எடியூரப்பா முடிவு செய்துள்ளார். இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் தோல்வி அடைந்த எச்.விஸ்வநாத், எம்.டி.பி.நாகராஜ் ஆகியோருக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்று கூறப்பட்டு வந்தது.
பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் உமேஷ்கட்டி, சோமசேகரரெட்டி, முருகேஷ் நிரானி, ரமேஷ் ஜார்கிகோளி ஆகியோர் நேற்று எடியூரப்பாவை நேரில் சந்தித்து, மந்திரி பதவி குறித்து பேசினர். இந்த நிலையில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே மந்திரி பதவி வழங்கப்படும் என்று எடியூரப்பா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே மந்திரி பதவி வழங்கப்படும். தோற்றவர்களுக்கு மந்திரி பதவி வழங்கும் பேச்சுக்கே இடமில்லை. வருகிற 21 அல்லது 22-ந் தேதிக்கு பிறகு நான் டெல்லி சென்று, மந்திரிசபை விரிவாக்கம் குறித்து முடிவு எடுப்பேன்.
மந்திரிசபையில் முதல்-மந்திரியுடன் சேர்த்து 34 இடங்கள் உள்ளன. இதில் தற்போது எடியூரப்பா உள்பட 18 மந்திரிகள் உள்ளனர். இன்னும் 16 இடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் 9 பேருக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
மீதமுள்ள 7 இடங்கள், பா.ஜனதாவின் மூத்த எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்த பேட்டியின் மூலம், இடைத்தேர்தலில் தோல்வி அடைந்த எச்.விஸ்வநாத், எம்.டி.பி.நாகராஜ் ஆகியோருக்கு மந்திரி பதவி வழங்கப்படாது என்பதை மறைமுகமாக எடியூரப்பா கூறியுள்ளார்.

இந்த மாத இறுதிக்குள் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும். இவ்வாறு எடியூரப்பா கூறினார்.