கள்ளக்குறிச்சியில், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தி.மு.க.வினர் கள்ளக்குறிச்சியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கள்ளக்குறிச்சி,
மதரீதியாக நாட்டை கூறு போடும் மத்திய பா.ஜ.க. அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி பா.ஜ.க. அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் அங்கையற்கண்ணி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் வக்கில் செல்வநாயகம், மாவட்ட அவைத்தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட பொருளாளர் கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சுப்பராயலு வரவேற்று பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்த பா.ஜ.க. அரசையும், இச்சட்டம் நிறைவேற துணை போன அ.தி.மு.க. அரசையும் கண்டித்து உரையாற்றினார்கள். இதைத்தொடர்ந்து கண்டன கோஷம் எழுப்பினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மாவட்ட துணைச்செயலாளர் காமராஜ், ஒன்றிய செயலாளர்கள் வெங்கடாசலம், முனியன், ஆறுமுகம், வசந்தவேல்,மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஆறுமுகம், இளைஞரணி அமைப்பாளர் தாகப்பிள்ளை, நகர துணைச்செயலாளர் அபுபக்கர், மவுண்ட் பார்க் பள்ளி தாளாளர் மணி மாறன் உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் ஆயிரத்துக்கும் அதிகமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.