கோவை வழியாக கேரளாவுக்கு, நூதன முறையில் கடத்திய 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 4 பேர் கைது
கோவை வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பொள்ளாச்சி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
பொள்ளாச்சி,
இதையடுத்து இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் விவேக், கோபு,போலீஸ்காரர்கள் காசிநாதன், சுரேஷ்பாபு, குருநாதன் ஆகியோர் கோவை அருகே மதுக்கரை சுங்கச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை தடுத்துநிறுத்தி சோதனை செய்தனர்.லாரியில் முட்டைக்கோஸ் காய்கறி கழிவுகள் மூட்டை கட்டிவைக்கப்பட்டு இருந்தன. இதற்கிடையில் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது முன்னுக்கு, பின்முரணாக தெரிவித்தார். இதனால்சந்தேகமடைந் தபோலீசார்முட்டைக் கோஸ்கழிவு மூட்டைகளை அகற்றிவிட்டு பார்த்தபோது, உள்ளே மூட்டை, மூட்டையாக 10 டன் ரேஷன் அரிசி இருப்பதுதெரியவந்தது.
விசாரணையில் நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தமுரளிதரன்(வயது 46). லாரி டிரைவர் மற்றும் உரிமையாளர் என்பதும், இவரும் பொள்ளாச்சிமகாலிங்கபுரத்தைசேர்ந்த வேணுகோபால்(57) ஆகியோர் லாரியில் இருந்ததுதெரியவந்தது.
மேலும் லாரிக்கு முன்னால் 2 பேர் காரில் செல்வதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து அந்த காரைபோலீசார் மடக்கி பிடித்தனர். காரில் கோவையை அடுத்த கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ராஜன்பிரகாஷ்(42),சொக்கம்புதூரைசேர்ந்தராஜேந்திரகுமார்(48) ஆகியோர்இருந்தனர்.
இதையடுத்துபோலீசார் 4பேரையும், ரேஷன் அரிசி மூட்டைகளுடன் லாரி மற்றும் காரை பொள்ளாச்சி உணவு கடத்தல்தடுப்பு பிரிவு போலீஸ்நிலையத்துக்கு கொண்டுவந்தனர். அங்கு வைத்து 4பேரிடமும்நடத்தப்பட்ட விசாரணையில்திருப்பூரில்இருந்து கேரள மாநிலம்பாலக்காட்டிற்குகோவை வழியாக ரேஷன்அரிசி கடத்தி சென்றது தெரியவந்தது. மேலும்போலீசாரிடம்சிக்காமல் இருக்க முட்டைக்கோஸ்காய்கறி கழிவைமூட்டை கட்டிஅரிசி மீதுவைத்து சென்றுஉள்ளனர். ஆனால்போலீசாரின்கிடுக்கிப்பிடிவிசாரணையில் 4 பேரும், ரேஷன் அரிசியுடன்சிக்கி கொண்டதுதெரியவந்தது.
இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட 10 டன் ரேஷன்அரிசியை பொள்ளாச்சிநுகர்வோர் வாணிப கிடங்குக்குபோலீசார்கொண்டு சென்றனர். கைதான 4பேரையும்நீதிபதி முன்னிலையில்ஆஜர்படுத்தி சிறையில்அடைத்தனர்.
பொள்ளாச்சியை அடுத்தகுஞ்சிபாளையத்தில்ரேஷன் அரிசி மூட்டைகள் அனாதையாககிடப்பதாகமேற்கு போலீஸ்நிலையத்துக்கு தகவல்தெரிவிக்கப்பட்டது. இதன் பேரில்சப்-இன்ஸ்பெக்டர்சின்னகாமணன்மற்றும்போலீசார்சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஆனால் ரேஷன் அரிசி மூட்டைகளை அங்கு யார் வைத்ததுஎன்பது தெரியவில்லை.
இதையடுத்து 40 மூட்டைகளில் இருந்த 920 கிலோ ரேஷன் அரிசியைஉணவு கடத்தல்தடுப்பு பிரிவுபோலீசாரிடம்ஒப்படைத்தனர். இதுகுறித்துஉணவு கடத்தல் தடுப்பு பிரிவுபோலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில் அம்பராம்பாளையத்தில்உணவு கடத்தல்தடுப்பு பிரிவுபோலீசார்வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மொபட்டை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போதுமொபட்டில்இருந்த மூட்டையில் 200 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்தபுகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்பராம்பாளையத்தை சேர்ந்த முகமதுஹனி(47)என்பவரை கைதுசெய்து, அவரிடம் இருந்து 200 கிலோ ரேஷன்அரிசியை பறிமுதல்செய்தனர்.