ஆண்களை விட பெண்கள் அதிகம்: புதுச்சேரி மாவட்டத்தில் 8 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் - கலெக்டர் தகவல்
வரைவு வாக்காளர் பட்டியல்படி புதுச்சேரி மாவட்டத்தில் 8 லட்சத்து 7 ஆயிரத்து 93 வாக்காளர்கள் உள்ளனர் என்றும், ஆண்களைவிட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர் என்றும் மாவட்ட கலெக்டர் அருண் கூறினார்.
புதுச்சேரி,
புதுவையில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி தொடங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் அருண் நேற்று வெளியிட்டார்.
அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் வாக்காளர் பட்டியலையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் என்.ஆர்.காங்கிரஸ் பொருளாளர் வேல்முருகன், அ.தி.மு.க. சார்பில் அன்துவான் சூசை, தி.மு.க. சார்பில் செ.நடராஜன், ஸ்ரீதர், இந்திய கம்யூனிஸ்டு அந்தோணி, பாரதீய ஜனதா கட்சி முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலெக்டர் அருணிடம், வாக்குப்பதிவு எந்திரத்தில் நோட்டா என்ற பட்டன் தேவையில்லாதது எனவும், யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் வாக்குச்சாவடிக்கு வருவதால் மற்றவர்கள் வாக்களிக்க காலதாமதம் ஏற்படுவதாகவும் தெரிவித்தனர். புதுவை மாநில அரசியல் கட்சிகளின் இந்த கருத்தை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.
தொடர்ந்து கலெக்டர் அருண் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 1-1-2020-ஐ தகுதி நாளாக கொண்டு சுருக்குமுறை திருத்தப்பணி மற்றும் இறுதிவாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. இந்த பணி ஜனவரி மாதம் 15-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
அதன்படி அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பணியிலிருக்கும் நிர்ணயிக்கப்பட்ட அதிகாரிகள் அலுவலக நேரங்களில் வரைவு வாக்காளர் பட்டியலை பொதுமக்களின் பார்வைக்கு வைத்திருப்பதுடன், சேர்த்தல் நீக்கல் மற்றும் திருத்தல் படிவங்களை பெற்றுக்கொள்வார்கள்.
தற்போதைய வரைவு வாக்காளர் பட்டியலின்படி புதுச்சேரி மாவட்டத்தில் 3 லட்சத்து 81 ஆயிரத்து 242 ஆண்வாக்காளர்கள், 4 லட்சத்து 25 ஆயிரத்து 775 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 76 பேர் உள்பட 8 லட்சத்து 7 ஆயிரத்து 93 வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் முடிந்து இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற பிப்ரவரி மாதம் 7-ந்தேதி வெளியிடப்படும். இவ்வாறு கலெக்டர் அருண் கூறினார்.
தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு கலெக்டர் அருண் பதில் அளித்து கூறியதாவது:-
கடலூர் சாலையில் மேம்பாட்டு பணிகளைமேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறைகள் மேலும் எனவே வருகிற பிப்ரவரி மாத இறுதியில் இதற்கான பணிகள் தொடங்கும்.
புதுச்சேரி மாவட்டத்தில் 607 குளங்கள் உள்ளன. அதில் நீரும், ஊரும் திட்டத்தின்கீழ் 175 குளங்கள்தூர்வாரப்பட்டுள்ளன. அந்த குளங்களில்ஓரளவு தண்ணீரும் நிரம்பியுள்ளது.
தற்போது மேலும் 40 குளங்கள் தூர்வாரப்பட்டு வருகிறது. அதில் 8 குளங்கள் பெருநிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் தூர்வாரப்பட்டுவருகிறது. இவ்வாறு கலெக்டர் அருண் கூறினார்.