வீட்டு முன்பு நிறுத்தியிருந்த 3 மோட்டார் சைக்கிள்கள் நள்ளிரவில் எரிப்பு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

மதுரையில் வீட்டு முன்பு நிறுத்தி இருந்த 3 மோட்டார்சைக்கிள்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.

Update: 2019-12-16 21:30 GMT
மதுரை, 

மதுரை மாநகரில் இரவு நேரங்களில் வீட்டின் முன் நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்களை தீ வைத்து கொளுத்தும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது. போலீசார் நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டாலும், இது போன்ற சம்பவத்தில் ஈடுபடும் குற்றவாளிகள் கைது செய்யப்பட வில்லை. இந்த நிலையில் மதுரை ராம்நகர் பாட சாலைதெருவில் வீடுகளின் முன்பு நிறுத்தி இருந்த நள்ளிரவு 3 மோட்டார் சைக்கிள்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன.

இதில் அந்த மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மர்ம கும்பலை தேடும் வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட வர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்