நிலத்தை கையகப்படுத்தியதற்கு உரிய இழப்பீடு வழங்காததால்: தாசில்தார் அலுவலகத்தை ஜப்தி செய்ய - அமீனாவுடன் வந்த முதியவர்
வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்காக கையகப்படுத்திய நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்காததால் பூந்தமல்லி தாசில்தார் அலுவலகத்தை ஜப்தி செய்ய அமீனாவுடன் வந்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது.
பூந்தமல்லி,
சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது 79). 1992-ம் ஆண்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்காக அதே பகுதியில் உள்ள இவருக்கு சொந்தமான 58 சென்ட் நிலத்தை வீட்டுவசதி வாரியம் கையகப்படுத்தியது. இதற்காக அவருக்கு இழப்பீடு தொகையாக ரூ.12 லட்சம் வழங்கியது.
ஆனால் இது தனக்கு போதாது. தனக்கு உரிய இழப்பீட்டுத்தொகையை வழங்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் சுப்பிரமணி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அவருக்கு மேலும் ரூ.17 லட்சம் இழப்பீடு தொகை வழங்க உத்தரவிட்டது. உச்சநீதிமன்றமும் இதை உறுதி செய்தது.
ஆனால் இதுவரையிலும் சுப்பிரமணிக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. இதையடுத்து நேற்று மாலை பூந்தமல்லி தாசில்தார் அலுவலகத்தை ஜப்தி செய்வதற்காக பூந்தமல்லி நீதிமன்ற அமீனா சந்தியாவுடன், சுப்பிரமணி அங்கு வந்தார்.
அப்போது தாசில்தார் காந்திமதி, “வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அலுவலகத்துக்கு சென்று சுப்பிரமணிக்கு உரிய இழப்பீட்டுத்தொகை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், இதற்காக துணை தாசில்தார் ஒருவரை அனுப்பி வைப்பதாகவும் கூறினார்.
இதையடுத்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். தனக்கு உடனடியாக இழப்பீட்டுத்தொகை கிடைக்கவில்லை என்றால் பூந்தமல்லி தாசில்தார் அலுவலகத்திலேயே தீக்குளிப்பேன் என்று அப்போது சுப்பிரமணி தெரிவித்தார். இதனால் தாசில்தார் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.