லாரி மோதியதால் விபத்து: சாலையோரம் நின்றவர்கள் மீது பஸ் மோதியதில் பெண் பலி - 5 பேர் படுகாயம்
மதுராந்தகம் அருகே நின்று கொண்டிருந்த அரசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில் நிலைதடுமாறி ஓடிய பஸ் சாலையோரம் நின்றிருந்தவர்களின் மீது மோதியதில் பெண் ஒருவர் பரிதாபமாக பலியானார். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
மதுராந்தகம்,
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பஸ் நிலையத்திலிருந்து (தடம் எண்:15) பஸ் ஒன்று உத்திரமேரூரை நோக்கி சுமார் 40 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மதுராந்தகம் பணிமனை எதிரே வந்த அரசு பஸ் பயணிகளை இறக்கிவிட்டு கொண்டு இருந்தது. அதன் பிறகு பஸ்சை டிரைவர் எடுக்க முயன்ற போது, பின்னால் வேகமாக வந்த லாரி ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி அரசு பஸ்சின் பின்னால் மோதியது. இதில், கட்டுபாட்டை மீறி நிலைதடுமாறிய பஸ் தறிகெட்டு ஓடியதில் சாலையோரம் நின்று கொண்டிருந்த, செங்கல்பட்டை சேர்ந்த பானுமதி (வயது39), மீது மோதியதில் பஸ் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இவர் மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலக அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக உள்ளார்.
மேலும் இந்த விபத்தில் கல்பாக்கம் அனுபுரத்தை சேர்ந்த கலைவாணி (42), மதுராந்தகம் இந்திரா நகரை சேர்ந்த சேகர் (57), மதுரையை சேர்ந்த நடத்துனர் இளையராஜா (35) உள்ளிட்ட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் மதுராந்தகம் மற்றும் செங்கல்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மதுராந்தகம் இன்ஸ்பெக்டர் ஏழுமலை உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான பானுமதி உடலை மீட்டு, மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான தப்பியோடிய லாரி டிரைவரை வலை வீசிதேடி வருகின்றனர். இந்த விபத்தால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.