குடியுரிமை சட்ட திருத்த நகலை கிழித்து எறிந்த மனித நேய ஜனநாயக கட்சியினர் 65 பேர் கைது

குடியுரிமை சட்ட திருத்த நகலை கிழித்து எறிந்த மனித நேய ஜனநாயக கட்சியினர் 65 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-12-16 22:15 GMT
நாகூர்,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து நாகூர் புதிய பஸ் நிலையத்தில் மனித நேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லா தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் நாகை முபாரக் பேசினார். இதில் மனித நேய ஜனநாயக கட்சி நகர செயலாளர் அபுசாலி சாஹிப் உள்பட திரளானோர் கலந்து கொண்டு குடியுரிமை சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.

அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குடியுரிமை சட்ட திருத்த நகலை கிழித்து எறிந்தனர். இதை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த நாகூர் போலீசார், மனித நேய ஜனநாயக கட்சியை சேர்ந்த 65 பேரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்