அடிப்படை வசதிகள் செய்து தராததால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக பேனர் வைத்த பொதுமக்கள்
கீழ்வேளூர் அருகே அடிப்படை வசதிகள் செய்து தராததால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக பொதுமக்கள் பேனர் வைத்துள்ளனர்.
சிக்கல்,
கீழ்வேளூர் அருகே பட்டமங்கலம் ஊராட்சி கீழ சொட்டால் வன்னம் 2-வது வார்டு பகுதியில் 23 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த வார்டில் 83 வாக்காளர்கள் உள்ளனர். இந்த பகுதியில் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என தெரிகிறது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நிலையில் அடிப்படை வசதிகள் செய்து தராததால் கீழ சொட்டால் வன்னம் 2-வது வார்டை சேர்ந்த பொதுமக்கள் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து பேனர் வைத்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.