திருமணம் செய்வதாகக் கூறி, பெண்ணை கர்ப்பமாக்கிய டிரைவர் கைது

பெரம்பலூரில் திருமணம் செய்வதாகக் கூறி இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-12-16 22:00 GMT
பெரம்பலூர், 

பெரம்பலூர் மாவட்டம், அய்யலூரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் சுகே‌‌ஷ்(வயது 19). நெல் அறுவடை எந்திர வாகன டிரைவர். இவர் 19 வயதுடைய ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தைகள் கூறி, பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றியுள்ளார். இதனால் அந்த பெண் தற்போது 7 மாதம் கர்ப்பமாக உள்ளார். 

இதுகுறித்து அந்த பெண்ணின் தாய் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து சுகேசை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி பெரம்பலூர் சப்-சிறையில் அடைத்தார்.

மேலும் செய்திகள்