நிலத்தகராறில் சம்பா நெற்பயிர்கள் விஷ பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து அழிப்பு 3 பேருக்கு வலைவீச்சு
கீழ்வேளூர் அருகே நிலத்தகராறில் சம்பா நெற்பயிர்கள் விஷ பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து அழிக்கப்பட்டன. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
சிக்கல்,
நாகை மாவட்டம் கீழ் வேளூர் அருகே உள்ள வெண்மணி நுகத்தூரை சேர்ந்தவர் பாண்டியன். விவசாயி. இவர் அதே பகுதியில் 3½ ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்துள்ளார். இந்தநிலையில் பாண்டியனின் சித்தப்பா வேணுகோபாலுக்கும், பாண்டியனுக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த சில நாட் களுக்கு முன்பு இரவு மர்ம நபர்கள் பாண்டியனின் வயலில் விஷ பூச்சிக்கொல்லி மருந்தினை தெளித்தனர்.
3 பேருக்கு வலைவீச்சு
இதன் காரணமாக வயலில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா நெற்பயிர்கள் கருகி நாசமாகின. இதுகுறித்து பாண்டியன் கீழ்வேளூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேணுகோபால் மற்றும் அவரது உறவினர்கள் 2 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.