பாதாள சாக்கடை நச்சுதொட்டியை நகராட்சி அதிகாரிகளிடம் அனுமதி பெற்று சுத்தம் செய்ய வேண்டும் ஆணையர் பேச்சு
திருவாரூரில் பாதாள சாக்கடை நச்சுதொட்டியை நகராட்சி அதிகாரிகளிடம் அனுமதி பெற்று சுத்தம் செய்ய வேண்டும் என நகராட்சி ஆணையர் சங்கரன் கூறினார்.
திருவாரூர்,
திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் மனித கழிவுகளை அகற்றுவோர் தடுப்பு மற்றும் மறுவாழ்வு சட்டம் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி ஆணையர் சங்கரன் தலைமை தாங்கினார். இதில் மேலாளர் முத்துகுமரன் மற்றும் திருமண மண்டபம், மருத்துவமனை, வணிக நிறுவனங்கள் ஆகியவற்றின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நகராட்சி ஆணையர் சங்கரன் பேசியதாவது:-
சுத்தம் செய்ய வேண்டும்
வீடு, கடை மற்றும் வணிக நிறுவனங்களில் உள்ள நச்சு தொட்டியினை அகற்றி விட்டு பாதாள சாக்கடை திட்டத்தில் இணைந்திட வேண்டும். நச்சு தொட்டியினை நகராட்சி அதிகாரி பரிந்துரையின்படி தான் சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்யும்போது நகராட்சியில் உரிய அனுமதி பெற்று, நகராட்சி அலுவலர்கள் முன்னிலையில் சுத்தம் செய்ய வேண்டும். இந்த தொட்டியினை காலை நேரங்களில் மட்டுமே சுத்தம் செய்ய வேண்டும்.
இரவு நேரங்களில் நச்சு தொட்டியை சுத்தம் செய்ய கூடாது. பாதாள சாக்கடை இணைப்பில் அடைப்பு ஏற்பட்டால் நகராட்சி அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்று துப்புரவு செய்ய வேண்டும். நச்சு தொட்டி கழிவுகளை திறந்த வெளி, நீர் ஆதாரங்கள் பகுதியில் கொட்ட கூடாது. இந்த கழிவுகளை நகராட்சி பாதாள சாக்கடை சுத்தரிப்பு நிலையத்தில் மட்டுமே கொட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.