உள்ளாட்சி தேர்தல் பணியாளர்கள் 8,400 பேருக்கு பயிற்சி அரியலூர் கலெக்டர் ரத்னா தகவல்

அரியலூர் மாவட்ட உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள 8,400 பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்று கலெக்டர் ரத்னா தெரிவித்தார்.

Update: 2019-12-14 23:00 GMT
அரியலூர்,

அரியலூர் மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை கணினி மூலம் சுழற்சி முறையில் தேர்ந்தெடுத்து ஒதுக்கீடு செய்யும் பணி, கலெக்டர் அலுவலகத்திலுள்ள தேசிய தகவலியல் மையத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ரத்னா தலைமை தாங்கி பேசியதாவது:-

அரியலூர் மாவட்ட உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள பணியாளர்களை கணினி மூலம் சுழற்சி முறையில் தேர்ந்தெடுத்து ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது. மேலும், இந்த பணியாளர்களுக்கு நாளை(இன்று)வாக்குப்பதிவு தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது.

திருமானூர்

அரியலூர் ஒன்றியத்திற்கு அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், திருமானூர் ஒன்றியத்திற்கு கீழப்பழுவூர் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியிலும், செந்துறை ஒன்றியத்திற்கு செந்துறை அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளியிலும், ஜெயங்கொண்டம் ஒன்றியத்திற்கு ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக்குலேசன் பள்ளியிலும், ஆண்டிமடம் ஒன்றியத்திற்கு மகிமைபுரம் மாடர்ன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் மற்றும் தா.பழூர் ஒன்றியத்திற்கு ஜெ.தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பான பயிற்சி மண்டல அலுவலர்களைக் கொண்டு வழங்கப்படவுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, திட்ட இயக்குனர்கள் சுந்தர்ராஜன் (ஊரக வளர்ச்சி முகமை), ஜெயராமன் (மகளிர் திட்டம்), கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பழனிசாமி, தேசிய தகவலியல் அலுவலர்கள் ஜான்பிரிட்டோ, டேவிட் மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டர்.

மேலும் செய்திகள்