இடைத்தேர்தல் தோல்வியால் விரக்தி: எம்.டி.பி.நாகராஜ் வீட்டுக்கு சென்று சமாதானப்படுத்திய எடியூரப்பா
இடைத்தேர்தலில் தோல்வி அடைந்ததால் விரக்தி அடைந்த எம்.டி.பி.நாகராஜை, அவரது வீட்டுக்கே சென்று எடியூரப்பா சமாதானப்படுத்தினார்.;
பெங்களூரு,
பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டை சட்டசபை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட எம்.டி.பி.நாகராஜ் தோல்வி அடைந்தார். அந்த தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட பா.ஜனதா எம்.பி.யான பச்சேகவுடாவின் மகன் சரத் பச்சேகவுடா வெற்றி பெற்றார். இதனால் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று மந்திரியாகி விடலாம் என்று நினைத்த எம்.டி.பி.நாகராஜ் மிகுந்த ஏமாற்றம் அடைந்தார். ஏனெனில் கூட்டணி ஆட்சியில் மந்திரியாக இருந்த அவர், அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் சேர்ந்திருந்தார்.
தற்போது எம்.எல்.ஏ. ஆக முடியாமல் இடைத்தேர்தலில் தோல்வி அடைந்ததால் விரக்தி அடைந்துள்ளார். தனது தோல்விக்கு பச்சேகவுடா எம்.பி. தான் காரணம் என்று எம்.டி.பி.நாகராஜ் குற்றச்சாட்டு கூறி இருப்பதுடன், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்த நிலையில், நேற்று காலையில் பெங்களூரு டாலர்ஸ் காலனியில் உள்ள முதல்-மந்திரி எடியூரப்பாவின் வீட்டுக்கு எம்.டி.பி.நாகராஜ் சென்றார். அங்கு அவர், எடியூரப்பாவை சந்தித்து பேசினார். எம்.டி.பி.நாகராஜை, எடியூரப்பா சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. இதனால் எடியூரப்பா வீட்டில் இருந்து எம்.டி.பி.நாகராஜ் புறப்பட்டு சென்று விட்டார். இந்த நிலையில், நேற்று மாலையில் பெங்களூரு கே.ஆர்.புரம் அருகே உள்ள எம்.டி.பி.நாகராஜின் வீட்டுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா சென்றார். அங்கு வைத்து அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் எடியூரப்பா ஈடுபட்டார்.
அப்போது எம்.எல்.சி. ஆக்கி மந்திரி பதவி வழங்குவதாக எம்.டி.பி.நாகராஜிடம் முதல்-மந்திரி எடியூரப்பா கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பச்சேகவுடா மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், சரத் பச்சேகவுடாவை பா.ஜனதாவில் சேர்க்க போவதில்லை என்றும் எடியூரப்பா உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. பின்னர் எம்.டி.பி.நாகராஜ் வீட்டில் இருந்து முதல்-மந்திரி எடியூரப்பா புறப்பட்டு சென்றார்.