மேட்டுப்பாளையம்- அன்னூர் சாலையில், கார் மீது லாரி மோதல்; வாலிபர் சாவு - பெண் போலீஸ் உள்பட 2 பேர் படுகாயம்

மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில் கார் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். பெண் போலீஸ் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம்குறித்து போலீஸ்தரப்பில்கூறப்படுவதாவது:-

Update: 2019-12-10 22:15 GMT
மேட்டுப்பாளையம்,

நீலகிரி மாவட்டம்ஊட்டி காந்தல்பகுதியை சேர்ந்தவர்பிரபாகரன்(வயது 46). இவருடைய மகன்சஞ்சய்குமார்(26). இவர் தமிழ்நாடுஅரசு போக்குவரத்து கழகத்தில்தற்காலிகஊழியராக பணியாற்றிவந்தார்.இந்தநிலையில்நெல்லையில் நடைபெற்ற இவரது நண்பரின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காகசஞ்சய்குமார்கடந்த 2நாட்களுக்குமுன்பு ஒரு காரில் நெல்லை சென்றார்.

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் நேற்று முன்தினம் மீண்டும் அதே காரில்ஊருக்கு புறப்பட்டார். அவருடன் அவரது நண்பர்தாமோதரன்(29) மற்றும் பெண் போலீஸ்மகாலட்சுமி(25)ஆகியோரும்வந்ததாக தெரிகிறது.

மேட்டுப்பாளையம்-அன்னூர்சாலையில் குமரன்குன்றுபிரிவுஅருகில் நேற்று அதிகாலை 5மணிக்கு கார்வந்துகொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி ஒன்று கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கியசஞ்சய்குமார்சம்பவஇடத்திலேயேபரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த பெண் போலீஸ் உள்பட 2பேரையும்அப்பகுதிமக்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிரசிகிச்சைஅளித்துவருகிறார்கள்.

இந்த விபத்துகுறித்து தகவல்அறிந்தசிறுமுகைபோலீசார்சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுசஞ்சய்குமாரின்உடலைமீட்டு பிரேத பரிசோதனைக்காகமேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்துவழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்