டி.கல்லுப்பட்டி அருகே, மரத்தில் கார் மோதி ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்

டி.கல்லுப்பட்டி அருகே சாலையோர மரத்தில் கார் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.;

Update: 2019-12-09 22:15 GMT
பேரையூர், 

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் உமையநல்லூர் பட்டறமுக்குவை சேர்ந்தவர்இஸ்மாயில்(வயது 73). இவரது நண்பர்கள் பசீர்குட்டி(72), முகம்மது நிசார், அன்சுதீன். இவர்கள் கொல்லத்தில் இருந்து மதுரையில் உள்ள தனியார் கண் ஆஸ்பத்திரிக்கு காரில் வந்தனர்.

இந்த கார் தென்காசி-மதுரை சாலையில் உள்ள டி.கல்லுப்பட்டி காடனேரி விலக்கு அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இதில் காரில் முன்பகுதி சேதமடைந்து பசீர்குட்டிக்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் இஸ்மாயில், முகம்மதுநிசார், காரை ஓட்டி வந்த அன்சுதீன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு பேரையூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் மற்றும் டி.கல்லுப்பட்டி போலீசார் விைரந்து சென்று பலத்த காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

ேமலும் பசீர் குட்டியின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த மூன்று பேரும் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்