ஜவுளி நிறுவனத்தில் ரூ.1¼ கோடி காடா துணிகள் திருட்டு - லாரி உரிமையாளர் கைது; கணக்காளருக்கு வலைவீச்சு

கோவை அருகே ஜவுளி நிறுவனத்தில்ரூ.1¼ கோடி காடா துணிகளை திருடிய லாரி உரிமையாளர் கைது செய்யப்பட்டார். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கணக்காளரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2019-12-09 22:15 GMT
கோவை,

கோவை அருகேசோமனூர்பகுதியில் மகள்பேப்ரிக்ஸ்எனும் ஜவுளி நிறுவனத்தைகந்தசாமிநடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் கணக்காளராககருமத்தம்பட்டியைசேர்ந்தமுருகேசன்என்பவரின்மகன்கார்த்திக்(வயது 24) பணிபுரிந்துள்ளார். இந்த நிறுவனம்அந்த பகுதியில்உள்ள விசைத்தறி உரிமையாளர்களிடம் நூலை வழங்கி, பின்னர் அவர்களிடம் இருந்துகாடா துணியை பெற்று விற்பனை செய்து வந்தது.

விசைத்தறி உரிமையாளர்களிடம் இருந்துகாடா துணியைநிறுவனத்திற்கு கொண்டுவரும் பணியினை லாரி உரிமையாளரானதிருப்பூர்மாவட்டம் பல்லடம் அருகே உள்ளகாரணம்பேட்டையைசேர்ந்தராசுஎன்கிறஉலகசாமிதுரை(47) மேற்கொண்டு வந்தார்.

இந்த நிலையில் டிரைவர்உலகசாமிதுரைமற்றும் கணக்காளர்கார்த்திக்ஆகியோர் இந்த நிறுவனத்திற்கு வரும்காடா துணிகளை திருடிவெளியே விற்பனை செய்து மோசடிசெய்ததாக கூறப்படுகிறது. இதற்காககார்த்திக்போலி கணக்குஎழுதியதாகவும்கூறப்படுகிறது. இதனிடையேகந்தசாமிக்குசந்தேகம் வந்ததால்கார்த்திக்எழுதிய கணக்கையும், நிறுவனகுடோனில்உள்ள காடாதுணிகளின்இருப்பையும்சரி பார்த்துஉள்ளார். இதில்ரூ.1¼ கோடி மதிப்புள்ளகாடா துணிகள்திருட்டு போய் இருப்பதுதெரியவந்தது.

இதையடுத்துமாவட்ட குற்றப்பிரிவுபோலீசில்கந்தசாமிபுகார் அளித்தார்.அதன்பேரில்இன்ஸ்பெக்டர் யமுனாதேவி மற்றும்போலீசார்வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் குற்றப்பிரிவுபோலீசாருக்கு கிடைத் தரகசிய தகவலின்படிகாரணம்பேட்டைபகுதியில் பதுங்கி இருந்த லாரி உரிமையாளர் உலகசாமிதுரையை போலீசார்கைது செய்தனர். பின்னர்அவரை கோர்ட்டில்ஆஜர்படுத்தி கோவைமத்திய சிறையில்அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ளகார்த்திக்கைவலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்