மழை நீர் தேங்கியதால்: குளம் போல் காட்சியளிக்கும் கிராம சேவை மைய கட்டிடம் - சீரமைக்க கோரிக்கை

மழை நீர் தேங்கியதால் குளம் போல் காட்சியளிக்கும் கிராம சேவை மைய கட்டிடம் சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-12-09 22:15 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த பூந்தமல்லி ஒன்றியம் கொரட்டூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் கடந்த 5 ஆண்டுக்கு முன்பு ரூ.14 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பீட்டில் கிராம சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக, மழைநீர் செல்ல வடிகால்வாய் இல்லாததால் கிராம சேவை மைய கட்டிடத்தை சுற்றிலும் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால் கிராம சேவை மைய கட்டிடம் பொதுமக்களுக்கு பயன்பாடு இல்லாமல் பூட்டி உள்ளது.

எனவே தொற்றுநோய் ஏற்படும் வகையில் உள்ள கிராம சேவை மைய கட்டிடத்தை சுற்றி தேங்கியுள்ள மழைநீரை அகற்றி சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்