தஞ்சை மாவட்டத்தில் அறுவடைக்கு தயார் நிலையில் கரும்புகள்
தஞ்சை மாவட்டத்தில் பொங்கல் கரும்புகள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.
தஞ்சாவூர்,
தமிழர்களின் முக்கிய பண்டிகைகளுள் பொங்கல் பண்டிகையும் ஒன்றாகும். தை மாதம் முதல் நாள் கொண்டாடப்படும் அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகை அன்று வீடுகளில் கோலமிட்டு, புதுப்பானைகளில் புதுஅரிசியை பொங்கலிட்டு கதிரவனுக்கு படையலிட்டு புத்தாடை அணிந்து மக்கள் கொண்டாடுவார்கள். பொங்கல் பண்டிகைக்காக மண் பானைகள், அடுப்புகள் தயாரிக்கும் பணி தஞ்சை மாவட்டத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பொங்கல் பண்டிகையில் முக்கிய இடத்தை பிடிப்பது கரும்பு, மஞ்சள் கொத்து தான். அதிலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்புவது கரும்பை தான். தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பொங்கல் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. எங்கு கரும்பு சாகுபடி செய்யப்பட்டாலும் காவிரி கரையோரம் சாகுபடி செய்யப் பட்டுள்ள கரும்புகளுக்கு தனிச்சுவை உண்டு.
அறுவடைக்கு தயார்
காவிரி பாயும் தஞ்சை மாவட்டத்தில் சூரக்கோட்டை, திருக்காட்டுப்பள்ளி, திருவிடைமருதூர், அம்மாப்பேட்டை, மாரியம்மன்கோவில், குளிச்சப்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி விற்பனை செய்வதற்காக ஏராளமான ஏக்கரில் கரும்புகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த கரும்புகள் நன்கு வளர்ச்சி அடைந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. மழையினால் சாய்ந்த கரும்புகளையும் நிமிர்த்தி 5 கரும்புகள் வீதம் தொழிலாளர்கள் கட்டி வைத்துள்ளனர். இவைகளும் அறுவடைக்கு தயாராக உள்ளது. இன்னும் சில நாட்களில் அறுவடை பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை, திருச்சி, திருவாரூர், நாகை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து கரும்பு வாங்கி செல்வார்கள்.