தூத்துக்குடியில் கஞ்சா வைத்து இருந்த 7 பேர் கைது

தூத்துக்குடியில் கஞ்சா வைத்து இருந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3¼ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2019-12-08 22:00 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் கஞ்சா வைத்து இருந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3¼ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கஞ்சாவுடன்...

தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகராஜன் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, குரூஸ்புரத்தில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்த தாளமுத்துநகர் கீழஅழகாபுரியை சேர்ந்த ஜெயமுருகன் மகன் லட்சுமணன் என்ற அழகு லட்சுமணன்(வயது 20), ராம்தாஸ்நகரை சேர்ந்த பெருமாள் என்ற செட்டி பெருமாள் மகன் கர்ணன்(19), சுனாமி காலனியை சேர்ந்த சம்சுதீன் மகன் பீர்முகமது என்ற பீர் கனி(19), ஆரோக்கியபுரத்தை சேர்ந்த செல்வக்குமார் மகன் சபாபதி(19), விவேகானந்தா நகரை சேர்ந்த செல்வக்குமார் மகன் மாரிசெல்வம்(19) ஆகிய 5 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது, அவர்கள் 1 கிலோ 100 கிராம் கஞ்சா வைத்து இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

கைது

தூத்துக்குடி வடபாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிகுமார் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஸ்டேட் வங்கி காலனி மெயின் ரோட்டில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டு இருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் தாளமுத்துநகர் ஜோதிபாசுநகரை சேர்ந்த ஜேசுமரியான் ( 68), மட்டக்கடையை சேர்ந்த சுப்பிரமணியன் (64) என்பதும், அவர்கள் அந்த பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா வைத்து இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ரவிகுமார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தார். மேலும் அவர்களிடம் இருந்து 2 கிலோ 250 கிராம் கஞ்சா மற்றும் ரூ.800 பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்