திருவள்ளூர் அருகே பெண் குழந்தையை ரூ.7,000-க்கு விற்க முயற்சி கணவன், மனைவி உள்பட 7 பேர் சிக்கினர்
திருவள்ளூர் அருகே 3 மாத பெண் குழந்தையை ரூ.7,000-க்கு விற்க முயன்ற கணவன், மனைவி உள்பட 7 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த புட்லூர் ரெயில் நிலையத்தில் 3 மாத பெண் குழந்தையை ரூ.7 ஆயிரத்திற்கு ஒரு கும்பல் விற்க முயற்சிப்பதாக திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்தின் தொலைபேசி எண் 181-க்கு தகவல் வந்தது. உடனே அதிகாரிகள் விரைந்து வந்து புட்லூர் ரெயில்நிலையத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
மேலும் திருவள்ளூர் தாலுகா போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ரெயில்நிலைய வளாகத்தில் சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிந்த 3 பெண்கள் உள்பட 7 பேரை பிடித்து விசாரித்தனர்.
ஆனால் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் 7 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தொடர்ந்து விசாரித்தனர்.
பிடிபட்டவர்களில் ஒரு தம்பதி சென்னை பாரிமுனையை சேர்ந்த பரிதி (வயது 20), அவரது மனைவி லட்சுமி (19) என்பது தெரியவந்தது. இவர்கள் குழந்தையை ரூ.7 ஆயிரத்திற்கு விற்க முயன்றதாக தெரிகிறது. மேலும் அவர்களிடம் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் இல்லை.
இதைத்தொடர்ந்து போலீசார் அந்த குழந்தையையும், லட்சுமியையும் திருவள்ளூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். குழந்தையை இந்த கும்பல் கடத்தி வந்ததா? அல்லது பரிதி-லட்சுமி தான் குழந்தையின் உண்மையான பெற்றோரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.