கலபுரகி அருகே வகுப்பறையில் 2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அரசு பள்ளி ஆசிரியர் கைது

கலபுரகி அருகே வகுப்பறையில் 2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-12-08 22:00 GMT
கலபுரகி, 

கலபுரகி அருகே வகுப்பறையில் 2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

பாலியல் தொல்லை

கலபுரகி மாவட்டம் சேடம் அருகே அரசு தொடக்க பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மல்லிகார்ஜூன் சாமி (வயது 59) என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகளுக்கு மாலை நேரத்தில் பள்ளி முடிவடைந்த பிறகு டியூசன் சொல்லி கொடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வேளையில் பள்ளி வகுப்பறையில் வைத்து 2 மாணவிகளுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தபோது இன்னொரு மாணவியை வகுப்பறை வாசலில் நின்று யாரும் வருகிறார்களா? என்பதை பார்க்க வைத்துள்ளார்.

கைது

இதனால் மனம் உடைந்த மாணவிகள் சம்பவம் குறித்து தங்களது பெற்றோர்களிடம் கூறி அழுதுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் சம்பவம் குறித்து சேடம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மல்லிகார்ஜூன் சாமியை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்