கன்டெய்னர் லாரி மோதி எலக்ட்ரீசியன் பலி

கன்டெய்னர் லாரி மோதி எலக்ட்ரீசியன் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2019-12-08 22:15 GMT
ஆற்காடு, 

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகா சோழங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ் (வயது 54), அதே பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (40). இருவரும் சென்னையில் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தனர்.

நேற்று முன்தினம் மாலை இருவரும் சென்னையில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்தனர். காமராஜ் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். இரவு சுமார் 8 மணி அளவில் திமிரியை அடுத்த மோசூர் அருகே செல்லும்போது ஆரணியில் இருந்து ராணிப்பேட்டை நோக்கி வந்த கன்டெய்னர் லாரி மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் காமராஜ் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த ஏழுமலை சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து திமிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்