பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நாளை நடைபெறும் கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்டம், பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நாளை நடைபெறும் என கலெக்டர் தகவல் வெளியிட்டுள்ளார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் கடந்த 2-ந் தேதியன்று அறிவிப்பு வெளியிட்டது. இதைத்தொடர்ந்து தேர்தல் விதிமுறைகள் அமலில் இருந்ததால், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் நடைபெற்று வந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் தேர்தல் அறிவிப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தீர்ப்பின் அடிப்படையில், பிரிக்கப்பட்ட காஞ்சீபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு பின்னர் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக நாளை (திங்கட்கிழமை) முதல் பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் காஞ்சீபுரம் மாவட்டம் மக்கள் நல்லுறவு மையத்தில் வழக்கம்போல் நடைபெறும்.
இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.