அம்பேத்கர் நினைவு தினம்: சிலைக்கு மாலை அணிவித்து தலைவர்கள் மரியாதை
அம்பேத்கர் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
புதுச்சேரி,
அம்பேத்கரின் நினைவு நாள் புதுவை அரசு சார்பில் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி புதுவை சட்டசபை எதிரே பாரதி பூங்காவில் உள்ள அவரது சிலை அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.
நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன், விஜயவேணி எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து அவர்கள் கடற்கரை சாலையில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் அமைச்சர் நமச்சிவாயம், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் ரகுநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
என்.ஆர்.காங்கிரசார் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் திருமுருகன், டி.பி.ஆர்.செல்வம், என்.எஸ்.ஜெ.ஜெயபால், சுகுமாறன், முன்னாள் சபாநாயகர் சபாபதி, முன்னாள் அமைச்சர் ராஜவேலு, முன்னாள் எம்.எல்.ஏ. வைத்தியநாதன், பொதுச்செயலாளர் பாலன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக கட்சி அலுவலகத்திலும் அம்பேத்கரின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
அ.தி.மு.க.வினர் சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜாராமன், துணை செயலாளர்கள் கணேசன், நாகமணி, உழவர்கரை நகர செயலாளர் அன்பானந்தம், மீனவர் அணி செயலாளர் ஞானவேல், அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாப்புசாமி, திருபுவனை காந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தி.மு.க.வினர் தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் துணை அமைப்பாளர் அனிபால் நேரு, பொருளாளர் சண்.குமாரவேல், நிர்வாகிகள் சக்திவேல், மாறன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பாரதீய ஜனதா கட்சியினர் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் சங்கர், செல்வகணபதி, பொதுச்செயலாளர்கள் ரவிச்சந்திரன், தங்க.விக்ரமன், துணைத்தலைவர் செல்வம் மற்றும் வி.சி.சி.நாகராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மாநில செயலாளர் சலீம் தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் விசுவநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பிரதேச செயலாளர் ராஜாங்கம், முன்னாள் செயலாளர் பெருமாள் உள்பட பலர் மாலை அணிவித்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் அமுதவன், ராஜ்பவன் தொகுதி செயலாளர் துரை.ஜெயக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மேலும் துணை பொதுச்செயலாளர் பாவாணன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் மோட்டார் சைக்கிளில் பழைய பஸ் நிலைய பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்து சிலைக்கு மாலை அணிவித்தனர்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மாநில செயலாளர் வேல்முருகன் தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. யூ.சி.ஆறுமுகம், நிர்வாகிகள் சுப்ரமணியன், வீரப்பன், எஸ்.டி.சேகர், சுகுணா செல்லப்பன், ஆனந்தன், காமாட்சி, ராஜா, சிலம்பரசன், மணிகண்டன், தினேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பாரதீய ஜனதா கட்சியினர் மாலை அணிவிக்க வந்போது திராவிடர் கழகத்தினர், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் அங்கு நின்றிருந்தனர்.
அம்பேத்கரை வாழ்த்தி குரல் எழுப்பிய அவர்கள் இந்துத்துவாவுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினார்கள். அவர்களுக்கு எதிராக பாரதீய ஜனதா கட்சியினரும் கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.