திருமண ஆசை வார்த்தைகள் கூறி இளம்பெண் கற்பழிப்பு விவசாயிக்கு 10 ஆண்டு சிறை; ரூ.2½ லட்சம் அபராதம் சிக்கமகளூரு கோர்ட்டு தீர்ப்பு
இளம்பெண்ணை கற்பழித்த விவசாயிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2½ லட்சம் அபராதமும் விதித்து சிக்கமகளூரு கோர்ட்டில் தீர்ப்பு வழக்கப்பட்டது.
சிக்கமகளூரு,
தரிகெரே தாலுகாவில், திருமண ஆசை வார்த்தைகள் கூறி இளம்பெண்ணை கற்பழித்த விவசாயிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2½ லட்சம் அபராதமும் விதித்து சிக்கமகளூரு கோர்ட்டில் தீர்ப்பு வழக்கப்பட்டது.
இளம் பெண் கற்பழிப்பு
சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா லிங்கதஹள்ளியை சேர்ந்தவர் கிரண்(வயது 22). விவசாயியான இவருக்கும், அந்த பகுதியில் உள்ள ஒரு இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதை பயன்படுத்தி கொண்ட கிரண் அந்த இளம் பெண்ணிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறினார்.
இதை நம்பிய அந்த இளம் பெண்ணுடன், கிரண் பல முறை உல்லாசம் அனுபவித்துள்ளார். அதன் பிறகு இளம்பெண் கிரணை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் கிரண் திருமணத்துக்கு மறுத்துள்ளார். இதனால் இளம்பெண் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
10 ஆண்டு சிறை
இதை தொடர்ந்து தனது மகளை கிரண் திருமண ஆசைவார்த்தைகள் கூறி கற்பழித்து விட்டதாக இளம்பெண்ணின் பெற்றோர் லிங்கதஹள்ளி போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் கிரணை போலீசார் கைது செய்து சிக்கமகளூரு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த சம்பவம் கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்தது.
இந்த வழக்கு நேற்று முன்தினம் நீதிபதி உமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கிரணுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.2½ லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இதையடுத்து போலீசார் கிரணை கைது செய்து சிறையில் அடைத்தனர்.