மறுசீராய்வு எண்ணத்தை கைவிட்டு உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு முன்வர வேண்டும் - முன்னாள் எம்.பி.ராமதாஸ் வலியுறுத்தல்

தொகுதி மறுசீராய்வு என்றஎண்ணத்தை கைவிட்டுஉள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு முன்வர வேண்டும் என்று முன்னாள் எம்.பி.ராமதாஸ் வலி யுறுத்தினார்.

Update: 2019-12-05 23:15 GMT
புதுச்சேரி, 

புதுவை அ.தி.மு.க.இணை செயலாளர்ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:-

புதுவையில் தொகுதிமறுசீரமைப்புக்குபின்தான்உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்ற உள்ளாட்சி துறை அமைச்சரின் கூற்று நியாயமற்றது. அடித்தள ஜனநாயகத்துக்கு எதிரானது. கடந்த 8 ஆண்டுகளாக இந்த தேர்தலை நடத்தாத அரசு புதியகாரணங்களை சொல்லிஉள்ளாட்சிஅமைப்புகளைவலுவிழக்க செய்யும் யுக்தியாகத்தான் இந்த காரணங்கள்உள்ளன.

கடந்த 2016 ஜனவரியில் அரசு மறுசீரமைப்பின்வரைவு அறிக்கையை வெளியிட்டு அதன் மீது ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் என்றது. அப்போது உள்ளாட்சித்துறை அமைச்சரோ, முதல்-அமைச்சரோ அனைத்துக்கட்சிகூட்டத்தை கூட்டிஇந்த வரைவு அறிக்கையை விளக்கமாக விவாதித்துஆட்சேபனைகளை பெற்றுவரைவு அறிக்கையை இறுதி செய்திருக்கவேண்டும்.

அப்போது யாரும் ஆட்சேபனை தெரிவிக்காமல் வரைவு அறிக்கையை அப்படியே ஏற்றுக்கொண்டனர். இறுதி அறிக்கை வெளியிடப்பட்ட பிறகு ஆட்சேபனைகள் உள்ளதாக அமைச்சர் கூறுவது வியப்பாக உள்ளது. அதனால் மீண்டும் தொகுதிமறுசீராய்வு செய்ய இருக்கிறோம்என்பது தேர்தலைநடத்தாமல் இருப்பதற்கான உள்நோக்கத்தைத்தான் காட்டுகிறது.

தொகுதி மறுசீராய்வு என்றஎண்ணத்தை கைவிட்டுஇருக்கும் தொகுதி மறுசீராய்வின் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு முன்வரவேண்டும்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்