முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா நினைவு நாள் கடைபிடிப்பு
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. அவரது உருவப்படத்துக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.;
ஈரோடு,
தமிழகம் முழுவதும் நேற்று அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது.
அதன்படி ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஜெயலலிதா நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது.
பெருந்துறையில் குன்னத்தூர் ேராட்டில் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரது உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு பெருந்துறை தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
இதில் ஒன்றிய செயலாளர்கள் விஜயன் என்கிற ராமசாமி (பெருந்துறை), சி.டி.ரவிச்சந்திரன் (ஊத்துக்குளி), அவைத்தலைவர் சந்திரசேகரன், ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் பெரியசாமி, வேளாண் விற்பனை கூட்டுறவு சங்க துணைத்தலைவர் டி.டி.ஜெகதீஸ், தீனதயாளன், பெரியசாமி, அய்யாசாமி, முன்னாள் பேரூர் செயலாளர்கள் கே.வி.சுப்பிரமணியம், வி.கே.சின்னச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் என்.எம்.செல்வராஜ், ஊராட்சி கழக செயலாளர்கள் வி.வி.வாசு, ரவிச்சந்திரன், சிவக்குமார், மாணிக்கம், சுப்பிரமணியம் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அந்தியூர் தவுட்டுப்பாளையத்தில் நடந்த நினைவு நாள் நிகழ்ச்சிக்கு இ.எம்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி ஜெயலலிதா உருவப்படத்துக்கு மலர் தூவிஅஞ்சலி செலுத்தினார். இதில் கூட்டுறவு சங்க தலைவர்கள் பால்சாமி, கிருஷ்ணன், மோகன், குருராஜ், ராமச்சந்திரன், சண்முகம் உள்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் அந்தியூர் காந்தி மைதானத்தில் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு அந்தியூர் நகர அ.தி.மு.க. செயலாளர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கி ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
கொடுமுடியில் அ.தி.மு.க. சார்பில் புதிய பஸ் நிலையம் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்துக்கு முன்னாள் பேரூராட்சி தலைவர் சரவணன் தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் மனோகரன், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் பெரியதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைச்செயலாளர் டி.பி.லியாகத் அலி, வக்கீ்ல் முத்துசாமி, முன்னாள் கவுன்சிலர்கள் வெண்ணிலாபாலு, எம்.பாஸ்கர சேதுபதி, மாணவர் அணி செயலாளர் சதாஸ் செந்தில், இளம்பெண்கள் பாசறை செயலாளர் சக்ரவர்த்தி, நத்தமேடு ராஜேந்திரன், கொடுமுடி பேரூர் இளைஞர் அணி செயலாளர் சதாசிவம் உள்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
ஊஞ்சலூர் அருகே உள்ள காரவலசு பிரிவு பகுதியில் ஜெயலலிதா நினைவுநாளையொட்டி அவரது உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றியக்குழு கவுன்சிலர் விஜயலட்சுமி தலைமையில் ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டு ஜெயலலிதா உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
புஞ்சைபுளியம்பட்டி நகர அ.தி.மு.க. சார்பில் அங்குள்ள பஸ் நிலையம் முன்பு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்துக்கு நகர செயலாளர் ஜி.கே.மூர்த்தி தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் டி.பாபு, பொன்னுசாமி, நாகராஜ், ஜெயசேகரன், ஆர்.மயில்சாமி, பி.என்.மயில்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். பவானிசாகர் ஒன்றியம் மற்றும் பேரூர் அ.தி.மு.க. சார்பில் பவானிசாகர் பஸ் நிலையம் அருகில் ஜெயலலிதா உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு பேரூர் செயலாளர் கே.துரைசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் வி.ஏ.பழனிச்சாமி முன்னிலை வகித்தார். இதில் அ.தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டு ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி ெசலுத்தினர்.
சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பில் செண்பகப்புதூரில் ஜெயலலிதா நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் வி.சி.வரதராஜ் தலைமை தாங்கி ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
இதில் ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் என்.பி.ரகு, இளைஞர் பாசறை செயலாளர் சஞ்சீவிகுமார், கூட்டுறவு சங்க தலைவர் பொன்னுசாமி, செண்பகப்புதூர் ஊராட்சி முன்னாள் துணைத்தலைவர் சுப்பிரமணியம், ஒன்றிய இணைச்செயலாளர் முத்துலட்சுமி பழனி உள்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
சத்தியமங்கலம் நகர மற்றும் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் சத்தி நகராட்சி அலுவலகம் அருகி்ல் நினைவு நாள் நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி ஜெயலலிதா உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் எஸ்.கே.பழனிச்சாமி, சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் சி.என்.மாரப்பன், நகர செயலாளர் எஸ்.வி.கிருஷ்ணராஜ், அரியப்பம்பாளையம் பேரூர் கழக ஜெயலலிதா பேரவை செயலாளர் மிலிட்டரி சரவணன், கூட்டுறவு விற்பனை சங்க முன்னாள் தலைவர் துரைசாமி, முன்னாள் அவைத்தலைவர் குணசேகரன், முன்னாள் நகராட்சி தலைவர் ஓ.சுப்பிரமணியம், முன்னாள் கவுன்சிலர்கள் ஆனந்தன், அம்மாசை மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அம்மாபேட்டை பேரூர் கிளை கழகம் சார்பில் அங்குள்ள பஸ் நிலையம் அருகில் ஜெயலலிதா உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. நிகழ்சிக்கு பேரூர் செயலாளர் டி.செந்தில்குமார் தலைமை தாங்கி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். முன்னதாக கட்சியினர் ஜெயலலிதா உருவப்படத்தை கையில் ஏந்தியவாறு பேரூர் கிளை கழக அலுவலகத்தில் இருந்து பஸ் நிலையத்துக்கு மவுன ஊர்வலமாக வந்தனர். இதேபோல் சுந்தராம்பாளையம், எஸ்.பி.குள்ளனூர் ஆகிய பகுதிகளிலும் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் கே.கே.மூர்த்தி, முன்னாள் கவுன்சிலர்கள் யு.கே.ராஜேந்திரன், சத்தியமூர்த்தி, ரவி, சரவணன், ஜெயக்குமார், எ.கார்த்திக், எம்.ரவி உள்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
பெருந்துறை அருகே உள்ள திங்களூரில் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நால்ரோடு சந்திப்பில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு ஈரோடு புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் ஏ.கே.சாமிநாதன் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னுதுரை, முன்னாள் தொகுதி செயலாளர் தி்ங்களூர் கந்தசாமி, முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஆர்.பழனிச்சாமி, முன்னாள் மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் எஸ்.ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ஊத்துக்குளி ஒன்றிய முன்னாள் அ.தி.மு.க. செயலாளர் கே.கே.பழனிச்சாமி, பெருந்துறை ஒன்றிய விவசாய அணி செயலாளர் கிருஷ்ணன், ஒன்றிய அ.தி.மு.க. பொருளாளர் சக்திவேல், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூர் முன்னாள் செயலாளர் கைலங்கிரி குப்புசாமி, பேரூர் முன்னாள் கவுன்சிலர் சிவகுமார், ஒன்றிய குழு முன்னாள் கவுன்சிலர் பழனி, பாப்பம்பாளையம் ஊராட்சி செயலாளர் மோகன்ராஜ், போலநாய்க்கன்பாளையம் சுப்பிரமணியம், ஊத்துக்குளி ஒன்றிய பாசறை செயலாளர் பிரேம்குமார், சிங்காநல்லூர் ஊராட்சி செயலாளர் சின்னசாமி மற்றும் பெருந்துறை, ஊத்துக்குளி ஒன்றியங்களை சேர்ந்த அ.தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.