பாபர் மசூதி இடிப்பு தினம்: பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி காரைக்குடி ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2019-12-05 22:30 GMT
காரைக்குடி, 

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நாட்டில் பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மக்கள் அதிகமாக கூடும் இடமான வழிபாட்டுத்தலங்கள், ரெயில் நிலையங்கள் உள்ளிட்டவைகளில் அசம்பாவிதம் ஏற்படாத வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் காரைக்குடி ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் பாபு தலைமையில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரெயில் நிலையம் மற்றும் ரெயில்வே பாலங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் காரைக்குடி பகுதியில் உள்ள தண்டவாளங்களில் தீவிர சோதனை செய்தனர்.

தொடர்ந்து ரெயில்வே நிலையத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரெயில் நிலையத்திலும், ரெயில் பெட்டிகளிலும் பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. ரெயில்வே போலீசார் பயணிகளுக்கு துண்டு பிரசுரங்கள் கொடுத்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். ரெயில் நிலையம் அருகே உள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் போலீசார் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டு அப்பகுதியில் உள்ள தனியார் விடுதிகளில் சோதனை செய்தனர். இதுமட்டுமின்றி ரெயில் நிலையத்திற்கு வரும் வாகனங்களையும் சோதனை செய்தனர்.

மேலும் செய்திகள்