ஏலகிரிமலையில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
ஏலகிரிமலையில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஜோலார்பேட்டை,
ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரிமலை பகுதியில் உள்ள மஞ்சங்கொள்ளை புதூர் பகுதியை சேர்ந்தவர் ரவி. தொழிலாளி. அவருடைய மகள் உமாராணி (வயது 19), அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். உமாராணியின் தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். உமாராணி அவருடைய தாயார் ஜெயலட்சுமியுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் உமாராணி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஏலகிரிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாமதேவன் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.