பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர் ராஜலட்சுமி
ஆத்தூர் அருகே பள்ளி மாணவிகளுடன் அமைச்சர் ராஜலட்சுமி கலந்துரையாடினார்.
பெத்தநாயக்கன்பாளையம்,
ஆத்தூர் அருகே அபிநவம் பகுதியில் உள்ள ஏகலைவா உண்டு உறைவிடப்பள்ளிக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி நேற்று வந்தார். அங்கு அவர் மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
அப்போது மாணவிகள் தங்களுக்கு கழிப்பிடம், மற்றும் கலையரங்கம் உள்ளிட்ட வசதிகள் தேவைப்படுவதாக கூறினர். அதற்கு அமைச்சர், மாணவிகளின் கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என உறுதியளித்தார்.
விளையாட்டு சீருடை
தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில், மத்திய பிரதேசத்தில் நடைபெறும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தமிழகம் சார்பில் பங்கேற்கும் 125 வீராங்கனைகளுக்கு விளையாட்டு சீருடை மற்றும் உபகரணங்களை அமைச்சர் வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தின் தலைசிறந்த பள்ளியாக இந்த ஏகலைவா பள்ளி திகழ்கிறது. இதற்கு மாணவிகளும், அதற்கு உறுதுணையாக பெற்றோரும் இருக்கின்றனர். நீங்கள் நன்றாக படித்து உயர்நிலை அடைந்தால் தான் பெற்றோருக்கு பெருமை. அழகு என்பது உலக அழகி ஐஸ்வர்யாராயோ, உலக அழகன் அஜீத்தோ இல்லை. நீங்கள் கலெக்டர், போலீஸ் அதிகாரி போன்ற உயர் அதிகாரிகளாக வரும் போது, நீங்கள் தான் உங்கள் பெற்றோருக்கு அழகு. நானும் அரசு பள்ளியில் தான் படித்தேன். தற்போது தனியார் பள்ளிகளுக்கு மேலாக, அரசு பள்ளிகள் சிறப்பாக செயல்படுகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
மாணவிகளுக்கு சால்வை
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் முன்பு தைரியமாக பேசியதாக துர்கா தேவி என்ற மாணவிக்கும், அதிக மதிப்பெண் பெற்ற கிரிஜா என்ற மாணவிக்கும் அமைச்சர் ராஜலட்சுமி சால்வை அணிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ராமன், மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், சட்டமன்ற உறுப்பினர்கள் சித்ரா, சின்னதம்பி, பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் ரிட்டோ சிரியாக்,சேலம் கூட்டுறவு ஒன்றிய தலைவர் மெடிக்கல் ராஜசேகரன், பெத்த நாயக்கன்பாளையம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் முருகேசன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் ஜெயகாந்தன், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய ஆணையாளர் தமிழ்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர் ரெங்கராஜன், ஏத்தாப்பூர் அ.தி.மு.க. செயலாளர் ராஜமாணிக்கம், பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் அப்பாவு உள்பட பலர் கலந்து கொண்டனர்.