போடி அருகே சேதமடைந்த சாலையில் நாற்று நடும் போராட்டம்

போடி அருகே சேதமடைந்த சாலையில் நாற்றுநடும் போராட்டம் நடந்தது.

Update: 2019-11-30 22:30 GMT
போடி,

போடி அருகே உள்ள தாலுகா அலுவலகம் செல்லும் சாலை மேலசொக்கநாதபுரம் பேரூராட்சி கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. இந்த சாலை சேதமடைந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மேலும் இப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இதுபற்றி மேலசொக்கநாதபுரம் பேரூராட்சி நிர்வாகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே இதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சேதமடைந்த சாலையில் நாற்று நடும் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு நகரசெயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார்.

இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவி முருகன், நகர துணை செயலாளர் சத்தியராஜ், ஒன்றிய துணை செயலாளர் சின்ராஜ், மாவட்ட குழு நிர்வாகிகள் பிரபு, ஜெயராஜ், கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்