திண்டிவனம் அருகே, சாலை தடுப்புக்கட்டையில் ஆம்னி பஸ் மோதல்; அய்யப்ப பக்தர் சாவு

திண்டிவனம் அருகே சாலையின் நடுவில் உள்ள தடுப்புக்கட்டையில் ஆம்னி பஸ் மோதியதில் அய்யப்ப பக்தர் ஒருவர் செத்தார்.

Update: 2019-11-29 22:45 GMT
திண்டிவனம்,

ஆந்திரா மாநிலம் விஜயநகரம் பாஞ்சால் கிராமத்தைச்சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் 42 பேர் ஒரு ஆம்னி பஸ்சில், கேரளாவில் உள்ள அய்யப்பன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு திருப்பதிக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்கள் நேற்று காலை 6 மணி அளவில் திண்டிவனம் அருகே உள்ள தீவனூர் என்ற இடத்தில் வந்து கொண்டு இருந்தனர். அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலை நடுவே உள்ள தடுப்புக்கட்டையில் மோதியது.

இந்த விபத்தில் பஸ்சில் இருந்த அய்யப்ப பக்தர்களில் கவுரி சங்கர் ராவ்(வயது 25), வீரமநாயுடு(60), தவிகித் நாயுடு(40), துர்கா(30), ஜெகதீ‌‌ஷ் ராவ்(30), யோகீஸ்வரராவ்(28), பால குள்ள புஜ்ஜி(35) உட்பட 10-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரோ‌‌ஷணை பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் போலீசார், விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினார்கள்.

அதில் கவுரி சங்கர் ராவ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக செத்தார். இந்த விபத்து குறித்து ரோ‌‌ஷணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்