விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற முன்வர வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு சத்குரு வலியுறுத்தல்
விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றமத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வலியுறுத்தினார்.
கோவை,
ஈஷா அவுட்ரீச் வழிகாட்டுதலின்படி இயங்கும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவன 6-ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடந்தது. அந்த நிறுவன தலைவர்குமார் தலைமை தாங்கினார். இந்த நிறுவனம் கடந்த 2018-19-ம் நிதியாண்டில் ரூ.11 கோடியே 95 லட்சம் வருமானம் ஈட்டி சாதனை படைத்து உள்ளது.
இதற்கு உதவியாக இருக்கும் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, நல்லறம் அறக்கட்டளை தலைவர் அன்பரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தை சேர்ந்த விவசாயிகள் காவிரி கூக்குரல் இயக்கத்துக்கு 1 லட்சம் மரக்கன்றுகளை உற்பத்தி செய்து கொடுப்பதாக உறுதியளித்து, அதற்கு தொடக்கமாக ஒரு மரக்கன்றையும் சத்குருவிடம் வழங்கினார்கள். அதை பெற்றுக்கொண்டு சத்குரு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தில் தற்போது 1,000 விவசாயிகள் ஒன்றிணைந்து உள்ளனர்.அதுபோதாது. 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் விவசாயிகளை ஒன்றிணைக்க வேண்டும்.
ஒரே பகுதியில் அடுத்தடுத்து நிலம் வைத்துள்ள விவசாயிகளை ஒன்று சேர்க்கும் போது, அங்கு சிலமாற்றங்களை செய்யும்போது 4 ஆண்டுகளில் 8 முதல் 10 மடங்கு விவசாய உற்பத்தியை அதிகரிக்க முடியும். விவசாயிகள் தனித்தனியாக சாகுபடி செய்யும்போது செலவுகள் அதிகம் ஆகும். ஆனால் அவர்கள் ஒன்றிணைந்து செயல்படும்போதுசெலவுகளை குறைக்கமுடியும். விவசாயத்தை மற்றஎல்லா தொழிலை காட்டிலும் லாபகரமான தொழிலாக மாற்ற மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் அடுத்த தலைமுறையை சேர்ந்தவர்கள் விவசாயத்தில் ஈடுபடுவார்கள்.
விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய-மாநில அரசுகள் செய்ய முன்வர வேண்டும். நம் நாட்டில் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில் உணவு பற்றாக்குறைஏற்படாமல் இருக்க சில சட்டங்கள் இயற்றப்பட்டன. தற்போது அந்த நிலைமாறிவிட்டது. ஆனால் இன்னும்அந்த சட்டம்அமலில் இருக்கிறது. மற்றதுறையினருக்கு தங்களின் பொருட்களை விற்பனை செய்யக்கூடிய உரிமை உள்ளதோ அதுபோன்று விவசாயிகளுக்கும் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்யக்கூடிய உரிமையை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் சத்குரு நிருபர்களிடம் கூறியதாவது:- விவசாயத்துக்கு முக்கியபிரச்சினையாகதண்ணீர் உள்ளது. சில கிராமங்களில் குடிக்கக்கூட தண்ணீர் இல்லாத நிலைஇருக்கிறது. எனவே தண்ணீரை வீணாக்காமல் சேமித்து வைக்க வேண்டும். நமது மண்ணை பாதுகாக்க வேண்டும். தற்போது வெங்காயம் விலைரூ.100-ஐ தாண்டி விட்டதால் அனைவருக்கும் கவலை ஏற்பட்டு உள்ளது.
ஆனால் அந்த வெங்காயத்தை உற்பத்தி செய்யும் விவசாயிகள் எத்தனை ஆண்டுகள் விலை இல்லாமல் கஷ்டப்பட்டுஇருப்பார்கள்என்பதைநினைத்து பார்க்கவேண்டும். இந்தஉலகத்திலேயேகுறைந்த விலையில் உணவு கிடைப்பது நமதுநாட்டில்தான்.
இவ்வாறு அவர் கூறினார்.