வேதாரண்யம் அருகே இடப்பிரச்சினையில் வீடு இடிப்பு; 2 பேர் கைது

வேதாரண்யம் அருகே இடப்பிரச்சினையில் வீடு இடிக்கப்பட்டதில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2019-11-29 22:45 GMT
வேதாரண்யம்,

வேதாரண்யம் அருகே கத்தரிப்புலம் பனையடிகுத்தகை பகுதியைச் சேர்ந்தவர் ரவி ( வயது49). இவருடைய தந்தை வேதையன் இறந்து விட்டார். தனது தந்தை வசித்து வந்த இடத்தில் ரவி வீடு கட்டி குடியிருந்து வருகிறார். இந்த நிலையில் ரவி வீடு கட்டியிருக்கும் இடத்தை செம்போடை தெற்கு பகுதியைச் சேர்ந்த நடராஜன் மற்றும் பாலசுப்பிரமணியன் ஆகியோர் சொந்தம் கொண்டாடி வந்தனர். 

இதனால் அவர்களுக்கு இடையே இடபிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று திடீரென ரவியின் வீட்டை பாலசுப்பிரமணியன் (68), நடராஜன் (84) மற்றும் சிலர் சேர்ந்து இடித்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

 இதுகுறித்த புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியன், நடராஜன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் சிலரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்