வாலாஜாபாத்தில், வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து கணவன்- மனைவி காயம்

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சி, வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து கணவன், மனைவி காயம் அடைந்தனர்.;

Update: 2019-11-28 22:00 GMT
வாலாஜாபாத்,

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சி வன்னியர் தெருவில் வாடகை வீட்டில் வசிப்பவர் இனையதுல்லா (வயது 63) கைக்கெடிகாரங்கள் பழுது பார்க்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி தாஜ்உன்னிஷா (59). இவர்கள் இருவரும் தங்களது வீட்டில் நேற்று முன்தினம் தூங்கிக்கொண்டிருந்தனர். வாலாஜாபாத் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கனமழை பெய்து வந்ததால் திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கிய கணவன், மனைவி இருவரும் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். வீட்டில் வைத்திருந்த டி.வி., குளிர்சாதன பெட்டி, கட்டில், பீரோ, மின்விசிறி, துணிமணிகள், பாத்திரங்கள் உள்ளிட்ட வீட்டு உபயோகப்பொருட்கள் அனைத்தும் இடிபாடுகளில் சிக்கி சேதம் அடைந்தது.

இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். கணவன் மனைவி இருவரும் தங்க இடமின்றி உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். மழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்ததை அறிந்த வாலாஜாபாத் கிராம நிர்வாக அதிகாரி மற்றும் வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்