உலர வைத்த துணியை எடுத்த போது 12-வது மாடியில் இருந்து விழுந்து பெண் பலி

உலர வைத்த துணியை எடுத்த போது 12-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-11-28 22:15 GMT
பூந்தமல்லி,

சென்னை போரூர் அருகே மவுன்ட்-பூந்தமல்லி சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் 12-வது மாடியில் வசித்து வருபவர் ராஜூவ் (வயது 64). இவருடைய மனைவி அல்கா பட் நாகர் (61).

இவர், நேற்று முன்தினம் வீட்டின் பால்கனியில் உலர வைத்த துணிகளை எடுத்து கொண்டிருந்தார். அப்போது கொடியில் இருந்த ஒரு துணி நழுவி கீழே விழுந்தது.

அந்த துணியை பிடிக்க முயன்றபோது, அல்கா பட் நாகர், திடீரென நிலைதடுமாறி 12-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டார். இதில் படுகாயம் அடைந்த அல்காபட் நாகர், அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் இதுபற்றி போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், பலியான அல்கா பட் நாகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

மேலும் செய்திகள்