குளிர் அதிகரிப்பு: ஸ்வெட்டர், பனிக்குல்லா விற்பனை அமோகம்
பெரம்பலூரில் குளிர் அதிகரித்து வருவதால் ஸ்வெட்டர், பனிக்குல்லா விற்பனை அமோகமாக உள்ளது.
பெரம்பலூர்,
வழக்கமாக டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பனி அதிகமாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு முன்கூட்டியே நவம்பர் மாதம் இடையிலேயே பனி தொடங்கி விட்டது. இதற்கு, பெரம்பலூர் மாவட்டத்தில் அவ்வப்போது பெய்த மழையும் ஒரு காரணமாகும். மாலை 6 மணிக்கு தொடங்கும் பனிப்பொழிவு அதிகாலை 6 மணி வரை இருக்கிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினமும் கடுங்குளிரால் அவதிப்படுகின்றனர்.
பனியில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள பலபேர் ஸ்ெவட்டர், தலையில் குல்லா அணிந்து வருகின்றனர். இவைகள் ஜவுளிக்கடைகளில் கிடைத்தாலும் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம், ரோவர் வளைவு, சங்குப்பேட்டை, பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் சாலையோர தற்காலிக கடைகளிலும் விதவிதமான வகையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. தற்போது பனிப்பொழிவு அதிகமாக உள்ளதால் சாலையோர கடைகளில் ஸ்ெவட்டர், தலை குல்லா, மப்ளர், பெண்கள் தலையில் கட்டும் ஸ்கார்ப் ஆகியவற்றின் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது.
விலை உயர்வு
இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், பெங்களூருவில் இருந்து ஸ்ெவட்டர், தலைக்குல்லா ஆகியவற்றை மொத்தமாக கொள்முதல் செய்து வந்து சில்லரையாக விற்பனை செய்து வருகிறேன். இந்த ஆண்டு முன்கூட்டியே குளிர் தொடங்கிவிட்டதால் ஸ்ெவட்டர், ஸ்கார்ப், தலை குல்லா ஆகியவற்றை மக்கள் அதிகமாக வாங்கி செல்கின்றனர். ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் ஸ்ெவட்டரின் விலை உயர்ந்துள்ளது. இதில் தரத்தை பொறுத்து சிறுவர் களுக்கு ரூ.250-ல் இருந்தும், பெரியவர்களுக்கு ரூ.350-ல் இருந்தும் ஸ்ெவட்டர்கள் விற்பனைக்கு உள்ளது. ஸ்கார்ப் ரூ.30 முதல் ரூ.50 வரையிலும், தலை குல்லா சிறுவர்களுக்கு ரூ.50-ல் இருந்தும், பெரியவர் களுக்கு ரூ.70-ல் இருந்தும் உள்ளது என்றார். இதேபோல, திருப்பூர், ஈரோட்டில் மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்ட சால்வை சில்லரை விலையில் ரூ.300 முதல் ரூ.450 வரையிலும், போர்வை ரூ.150 முதல் ரூ.350 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கம்பளி போர்வைகளும் விற்பனை செய்யப்படுகிறது.