பெங்களூரு மாநகராட்சி கவுன்சிலர்கள் 3 பேர் நீக்கம் : காங்கிரஸ் அதிரடி நடவடிக்கை

இடைத்தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததாக புகார் எழுந்ததால் பெங்களூரு மாநகராட்சி கவுன்சிலர்கள் 3 பேரை கட்சியை விட்டு நீக்கி காங்கிரஸ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

Update: 2019-11-27 22:45 GMT
பெங்களூரு, 

கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கு வருகிற 5-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் பெங்களூரு யஷ்வந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் கவுன்சிலர்கள் 3 பேர் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருவதாக புகார் எழுந்தது. அந்த 3 கவுன்சிலர்களை கட்சியை விட்டு நீக்கி காங்கிரஸ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பெங்களூரு யஷ்வந்தபுரம் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பி.நாகராஜிக்கு எதிராக எங்கள் கட்சியை சேர்ந்த பெங்களூரு மாநகராட்சி கவுன்சிலர்கள் ராஜண்ணா (ஹாரோஹள்ளி வார்டு), ஆர்யசீனிவாஸ் (ஹெம்மிகேபுரா), பட்டீல் ராஜூ (பிளேக்ஹள்ளி) ஆகிய 3 பேர் எதிராக பணியாற்றி வருவதாக புகார் எழுந்துள்ளது. அவர்கள் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால், அவர்கள் 3 பேரும் கட்சியை விட்டு 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்